Aran Sei

விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து : ராணுவ வீரர்களும் பதக்கங்களைத் திருப்பி தர முடிவு

Image Credits: The Indian Express

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, நவம்பர் 26-ம் தேதி முதல், சிங்கு எல்லையில் விவசயிகள் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களது வீர தீரச் செயலுக்குப் பெற்ற பதக்கங்களை திருப்பி தர முடிவெடுத்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக அவர்கள் இதுவரை 5,000 பதக்கங்களைச் சேகரித்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் பதக்கங்களைத் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இந்த வீரர்கள், இப்போது விவசாயத்தை மட்டுமே ஒரே ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் 25,000 பதக்கங்களைச் சேகரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ‘லட்சத்துக்கும்’ அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

“ராணுவ வீரர்களும் விவசாயிகளும் கொண்ட குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன். என் குடும்பத்திலிருந்து எட்டு ஆண்கள் போரிலும் எல்லையிலும் உயிரிழந்துள்ளனர். நான் அதை நினைத்துப் பெருமை அடைந்திருக்கிறேன். ஆனால் தற்போது அரசு நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும் பொது, எதற்காகவும் பெருமை அடைய முடியவில்லை. இந்த நாடு வாழ்வதற்கே தகுதியற்றதாக மாறியுள்ளது” என்று 80 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஹவல்தர் பல்வந்த் சிங் கூறியுள்ளார்.

“நவம்பர் 26-ம் தேதியிலிருந்து நாங்கள் இங்குப் போராடி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கையைக் கேட்காத அரசு, குளிர்சாதன வசதி கொண்ட அறைகளில் அமர்ந்துகொண்டு இந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சில பதக்கங்களை திருப்பிக் கொடுப்பதற்காகக் கிட்டத்தட்ட 6 விவசாயிகள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்திக்க முயன்றார். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் அவர்கள் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்று குர்தசாபூரைச் சேர்ந்த மற்றொரு ஓய்வுபெற்ற வீரர் எஸ்.பி.சிங் கூறியுள்ளார்.

இரண்டு நாட்கள் அவர்களை காவலில் வைத்தது மட்டுமில்லாமல் தொலைபேசி உட்பட அவர்களது அணைத்து உடமைகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் ஹவல்தர் பல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

“நான் முன்னர் ராணுவத்தில் இருந்தேன் ஆனால் அதற்கும் முன் நான் ஒரு விவசாயி, ஒரு தொழிலாளி. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக கோரிக்கையை முன் வைத்து எங்களது பதக்கங்களை திருப்பி தர நாங்கள் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்