Aran Sei

தீவிரவாதி என்று நினைத்து ராணுவத்தால் சுடப்பட்ட மகன் – 16 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் 74 வயது தாய்

ராணுவத்தால் சூட்டு கொல்லப்பட்ட தன் மகனுக்காக 16 வருடங்களாக நீதிகேட்டு சந்தோஷ் குமாரி என்கிற 74 வயது தாய் போராடிவருகிறார்.

சந்தோஷ் குமாரியின் வீடு சிதலமடைதிருக்கும் நிலையில் தன் மருமகன் வீட்டில் தங்கியிருக்கும் அவர், நடப்பதற்கு சிரமப்படும் நிலையிலும், பார்வைத்திறன் குறைபாடு கொண்டுள்ள நிலையிலும் கூட தன் மகனுக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியோடு காத்திருக்கிறார்.

போலி என்கவுண்டர் வழக்கு: ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் பாஜக அரசு

கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தோஷ் குமாரியின் மகன் சுரீந்தர் குமார் ராணுவ வீரர் ஒருவரால் சூட்டுக்கொல்லப்பட்டார். ஆனால், அதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதியவே இல்லை.

இந்நிலையில், சந்தோஷ் குமாரியின் கடுமையான போராட்டத்திற்கு பின்னர், ஐந்து வருடங்கள் கழித்து சுரீந்தர் குமார் மரணம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. ஆனால் அதுவும் தவறுதலாகச்  சுடப்பட்டதால் மரணமடைந்தார் என்பதன் பேரில் வழக்கு கைவிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ‘போலி என்கவுண்டர்’ – ராணுவ அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சுரீந்தர் கொல்லப்பட்டது தொடர்பாக நௌஷெரா, ராஜவுரி பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவகங்களிலும் புகார் அளித்துள்ள சந்தோஷ் குமாரி, எல்லா அதிகாரிகளும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரிவித்துள்ள நௌஷெரா காவல்நிலைய அதிகாரி, “சுரீந்தர் சுடப்பட்டது ஒரு விபத்து. அதன் அடைப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சுரீந்தர் மரணம் தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள குறிப்பில், “சுரீந்தர் திடீரென்று தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி என்று எண்ணி தவறுதலாகச் சுட்டதாகக் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையில் எந்த குறிப்பும் இல்லை.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

இந்நிலையில், சுரீந்தர் மரணம்குறித்து தெரிவித்துள்ள அவரது தாய், கடந்த 2005 ஆம் ஆண்டு சுரீந்தர் உறவினர் மகளின் திருமணத்திற்காக நோனியால் கிராமத்திற்கு சென்றார். அப்போது மணமகள் தனது தாயின் கல்லறைக்குச் சென்று கடைசியாக ஒருமுறை பார்க்க விரும்பியதால், அப்போது அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு சுரீந்தர் கல்லறைக்குக் கூட்டி சென்றார் என  சந்தோஷ் குமாரி தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லறைக்குச் செல்லும் வழியில் ராணுவ முகாம் இருந்ததாகவும் அப்போது சென்று கொண்டிருந்த தன் மகனைத் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர் சுட்டதாகவும், தன் மகன் அப்பாவி என்று கூறிய போதும் அதைக் காதில் வாங்காமல் ராணுவ வீரர் சுட்டதாகவும், சுடப்பட்ட சுரீந்தரின் தாய் சந்தோஷ் குமாரி தெரிவித்துள்ளார்.

பீகார் : மூன்று மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டரில் கொலை

கொல்லப்பட்ட சுரீந்தர் குமாரின் உடலைச் சாலையை விட்டு ராணுவ முகாமிற்குள் ராணுவ வீரர்கள் தூக்கி சென்றது மட்டுமல்லாமல், சாலையில் சிந்தியிருந்த ரத்தத்தையும் தண்ணீரால் கழுவி தடயத்தை அழித்துள்ளனர்.

இந்நிலையில், 74 வயதில் உடல்நலக்குறைபாட்டோடும் தன் மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுரிந்தரின் தாய் சந்தோஷ் குமாரி போராடி வருகிறார்.

சுரீந்தர் மரணம் தொடர்பாகச் சுரீந்தர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைத்தருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு உதவுவதாகவும் அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை எந்த உதவியும் கிடைக்காமல் சந்தோஷ் குமாரி தன் மகனுக்காகப் போராடிவருவது வருந்தத்தக்கது.

 

கட்டுரையாளர் – அருண் ஷர்மா

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான  கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்