Aran Sei

ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்

Image Credits: The Week

கொரோனா தொற்று உயர்ந்து வரும் சூழலில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுமென மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

டெல்லி சிறையில் 190 கைதிகளுக்கு கொரோனா தொற்று – இடநெருக்கடியால் கைதிகளுக்கு பரவும் அபாயம்

மத்தியபிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதி கேட்டதை அடுத்து ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளதாக மத்தியபிரதேச முதலமைச்சர் அலுவலகம் கூறுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ராணுவ உயரதிகாரிகள் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்துள்ளதாகவும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 30 லட்சம் பேர் பங்கேற்ற ஹரித்வார் கும்பமேளா : நான்கு நாட்களில் 1086 கொரோனா தொற்றுகள்

நேற்று , மத்திய பிரதேசத்தில் 12,248 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் தொற்று காரணமாக இதுவரை 66 பேர் இறந்துள்ளனர் இதன் காரணமாக இறப்பு எண்ணிக்கை 4,557 ஆக உயர்ந்துள்ளது.

SOURCE; THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்