Aran Sei

ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை – ஜெனரல் மனோஜ் நரவனே அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்காக மக்கள் ராணுவ மருத்துவமனைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம் என ராணுவ முதன்மை ஜெனரல் மனோஜ் நரவனே தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ராணுவம் பங்களிப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்

மேலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள ராணுவ மருத்துவ பணியாளர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், நாட்டின் பல இடங்களில் ராணுவம் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவுள்ளதாகவும் மனோஜ் நரவனே பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக  பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாக  தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் வாகனங்களுக்கு உதவ எங்கெல்லாம் ஆட்கள் தேவைப்படுகிறதோ அங்கு ராணுவத்தை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதி என்று நினைத்து ராணுவத்தால் சுடப்பட்ட மகன் – 16 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் 74 வயது தாய்

இதே போன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவுவது குறித்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்