Aran Sei

ஜம்மு காஷ்மீரில் ‘போலி என்கவுண்டர்’ – ராணுவ அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த ஜூலை 18-ம் தேதி ஷோபியன் பகுதியில் உள்ள அம்ஷிபோரா கிராமத்தில் மூன்றுபேரை திட்டமிட்டு என்கவுண்டர் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு பேர் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த்தாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான இந்த விசாரணை குழு 300 பக்க குற்றப் பத்திரிகையை நீதிபதிக்கு முன் தாக்கல் செய்துள்ளது. அதில், ராணுவ தலைவர் பூபிந்தர், ஷோபியனில் வசிக்கும் தபீஷ் அகமது, புல்வாமாவில் வசிக்கும் பிலால் அஹ்மத் ஆகிய மூவரின் மீதும் குற்றம் சட்டப்பட்டுள்ளது.

மத உரிமைகளுக்கு எதிராகத் திரளும் மாநிலங்கள் – கேள்விக்குள்ளாகும் அரசமைப்புச் சட்டம்

இம்மூவரும் என்கவுண்டர் நடவடிக்கைக்கு வழிவகை செய்ததாகக் கூறப்படுகிறது. பிர் பஞ்சால் பள்ளத்தாக்கின் ராஜோரியிலிருந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் – அப்ரார் அகமது (25), இம்தியாஸ் அகமது (20) மற்றும் முகமது இப்ரார் (16) இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அப்போது காவலர்கள் இவர்களை “அடையாளம் தெரியாத போராளிகள்” என்று அழைத்தனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்.

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

பின்னர், டிஎன்ஏ மாதிரிகளை வைத்து அவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது குடும்பத்தினர் தெற்கு காஷ்மீரில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தனர்.

டெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையில், ஷோபியனின் “போலி என்கவுண்டர்” தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டது என்று இராணுவம் கூறியுள்ளது. மேலும் விசாரணையைத் தொடர்வதற்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார்கள். நேர்மையான வழியில் செயல்படுவது தான் ராணுவத்தின் வழக்கம்” என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்