Aran Sei

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் – தகர்ந்தது பாலின பாகுபாடு

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.கவுல் முன் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட்டி, “தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களைச் சேர்க்க  இராணுவத்தின் உயரதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி ராணுவ அதிகாரிகளாக சேர்வதற்கான பயிற்சி மையம் ஆகும்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த  பொதுநலமனு  மீதான விசாரணையின் போது,  தேசிய பாதுகாப்பு  அகாடமி  (National Defence Academy) நுழைவு தேர்விற்கு பெண்கள் சேர பாலின அடிப்படையில் தடை செய்திருப்பது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில்,  தேசிய பாதுகாப்பு  அகாடமியில் பெண்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.

மேலும், இதற்கான நடவடிக்கான  எடுக்க ஒன்றிய அரசு  அவகாசம் கோரியாதால், ஒன்றிய  அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source:The indian express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்