அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிபதி தனது உத்தரவில், மதமாற்ற முயற்சி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அது உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம்.
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகக் கூறப்படும் கோணத்தில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தாதால் தான் இந்த வழக்கை சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பக் கட்டத்திலேயே மதமாற்றம் செய்ததாகக் கூறப்படும் கோணத்தை நிராகரிக்கும் வகையில் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பியதை உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்துள்ளது.
மரணமடைந்த மாணவியிடம் காணொளி எடுத்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறைக்கு ஆணையர் உத்தரவிட்டார். முத்துவேலுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் “மதமாற்றம் செய்ததாகக் கூறப்படும் கோணம் தொடர்பான அனைத்து கருத்துக்களையும் ஊமையாக்கக் காவல் கண்காணிப்பாளர் விரும்பினார்” என்று உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
காணொளியை எடுத்த நபரைக் காவல் ஆணையர் கிட்டத்தட்ட அச்சுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, மதமாற்றம் தொடர்பான கோணத்தில் விசாரணையைத் நடத்தியிருக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆளும் கட்சியின் ஐடி பிரிவு பள்ளி அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் பல தனிப்பட்ட காணொளிகளின் பகுதிகளை வெளியிட்டுள்ளது. இது மீண்டும் மீண்டும் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் விசாரணையின் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை குறித்துப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இறக்கும் தறுவாயில் மாணவி தனது சித்தி மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை, மாறாக விடுதி காப்பாளர் சாகயமேரி மீது மட்டும்தான் துன்புறுத்தல் புகார்களைப் பதிவுசெய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.
சீரியஸ் மென் என்ற திரைப்படத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தமிழ் தலித் குடும்பத்தை மதம் மாற வற்புறுத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.
கே.பாலச்சந்தரின் “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தில், ஒரு பெண் தனது காதலன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொன்னதால், தனது காதல் உறவை முறித்துக் கொள்வதையும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், இத்தகைய திரைப்படங்கள் உண்மையைப் பிரதிபலிக்கின்றன என்று கூறியுள்ளார்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.