பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக பாலஸ்தீனம் நடத்தும் தாக்குதல் சர்வதேச விதி அனுமதித்திருக்கிற எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவே நடத்தப்படுவதாக எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் நயந்தாரா சஹ்கள் தலைமையிலான எழுத்தாளர்கள், கலைஞர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலிய அரசு குழந்தைகள் உட்பட எண்ணற்ற பாலஸ்தீனர்களைக் கொன்று குவிப்பதாகவும், இஸ்ரேலியக் குடியேறிகள் சட்டவிரோதமாக பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான நிலங்களைக் கைப்பற்ற நினைப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், “பாலஸ்தீனத்தின் மீது முதலில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் அரசு. எனவே, தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவே பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்” என்று அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே நாளில் 42 பாலஸ்தீனர்கள் பலி – வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ஐநா வேண்டுகோள்
நடிகர் ரத்னா பதக் ஷா, நசீருதீன் ஷா, நாவலாசிரியர் கீதா ஹரிஹரன் மற்றும் பொருளாதார வல்லுனர் பிரபாத் பட்நாயக் ஆகியோர் அடங்கிய அந்தக் குழு, காசாவில் சமீபத்திய வன்முறை சம்பவத்தில் பாலஸ்தீனர்களின் “கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும்” பறிக்கக் கூடாது என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எகிப்திய விமானப் படை காசா பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அரசியல் ரீதியாக அரபு நாடுகள் பாலஸ்தீனத்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.