Aran Sei

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியின் கடன் பத்திரங்கள் தான் காரணமா? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலின் உண்மைத்தனமை

Image Credits: Bloomberg Quint

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்க முடியாமல் இருப்பது காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கான வட்டித் தான் காரணம் என அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடன் பத்திரங்களுக்கு வட்டி செலுத்தும் சுமை இல்லாமல் இருந்திருந்தால், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்திருக்க முடியும். அதிக எண்ணிக்கையில் கடன் பத்திரங்களை  வெளியிட்டதன் மூலம் கடந்த காங்கிரஸ் ஆட்சி எங்கள் பணியைக் கடினமாக்கியுள்ளது. நான் எதாவது செய்ய வேண்டுமானால், பெட்ரோல் பங்குகளாக்கான வட்டியைக் அளித்து முடிக்க வேண்டும்.” என கூறியிருந்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் 70,192.75 கோடி ரூபாய் வட்டியாக வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“மொத்தம் உள்ள 1.35 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களில் ரூ. 3,500 கோடி மட்டுமே திரும்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ரூ. 1.3 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் இந்த (2021-22) நிதியாண்டில் இருந்து 2025-26 நிதியாண்டிற்குள் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது” என அவர் கூறினார்.

“வரி வருவாய்யில் ஒரு கணிசமான தொகை கடன் பத்திரங்களின் முதன்மை மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தவே செல்கிறது. இது எங்களுக்கு ஒரு நியாயமற்ற  சுமை” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உண்மையில் ஒன்றிய அரசு வசூலிக்கும் கலால் வரியில் ஒரு குறைந்த அளவிலான தொகையே, பெட்ரோலிய பங்குகளுக்கான வட்டியாக அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2015 முதல் 2021 வரையிலான நிதியாண்டில், பெட்ரோலிய பொருட்கள் மீது 15,59,104 கோடி ரூபாய் கலால் வரியாக வசூலிகப்பட்டிருக்கும் நிலையில், பெட்ரோலிய பங்குகளுக்கான வட்டியாக ரூபாய் 70,196 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு (2021-22) மற்றும் 2025-26 ஆம் நிதியாண்டிற்குள் எண்ணெய் பத்திரங்கள் மற்றும் அதன் வட்டி என மொத்தம் ரூ1,68,264 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 3.71 லட்சம் கோடி ரூபாய் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி வருவாயாக பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source: new indian express

தொடர்புடைய பதிவுகள்:

இணையவசதிக்காக மலையுச்சிக்கு சென்ற பழங்குடியின மாணவன் தவறிவிழுந்து மரணம் – கிராமங்களில் போதிய வசதிகள் செய்துதர கல்வியாளர்கள் கோரிக்கை

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – மூடப்பட்ட அதானி நிறுவனமும் மக்கள் போராட்டமும்

பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்