Aran Sei

சோகனூர் தலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

image credit : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேஸ்புக் பக்கம்

ரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்ட தலித்துகள் இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமெனவும், படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வரும் 3 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டுமெனவும், மேலும், கொலை பாதகச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இப்படுகொலை தொடர்பாக, இன்று (ஏப்ரல் 9), அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (20), செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரும் நேற்று இரவு கௌதம நகர் பகுதியில் 20 பேர் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

“அ.தி.மு.க-வின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானைச் சின்னத்துக்கு அந்தக் கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர்.” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பா.ம.க ஆதரிக்கும் அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது, இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிக்பாஸில் மட்டுமா சாதி? துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பார்வை

இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டித்துள்ள அவர், “படுகொலை செய்யப்பட்ட இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமெனவும், படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வரும் 3 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் கொலை பாதகச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரையும் இழந்து தவிப்போருக்கு ஆறுதல்! சட்டத்தைக் கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களைச் சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்