Aran Sei

சோகனூரில் தலித்துகள் இரட்டைப் படுகொலை – நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 8 பேர்மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 8 அன்று அரக்கோணம் வட்டம் , சோகனுர் பகுதியில் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் இந்த சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட சமுகத்தை 3 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சோகனூர் தலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரக்கோணம் காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 11 பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்தப் புகார் மனுவில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சௌந்தராஜும், அப்புனும் இருசக்கர வாகனத்தில் குருவராஜபேட்டை மார்க்கெட் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர் அப்போது எதிரில் தனக்கு தெரிந்த ஒருவர் வரவே அப்புனு ‘ ஏய் ‘ என அழைத்துள்ளார்.

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை – குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அப்போது வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நபர்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவர்களை எந்த ஊர் என் கேட்டதாகவும் , செப்பேடு காலணி என்று சௌந்தராஜும் ,அப்புனும் கூறியவுடன் ,” காலணி காரனுக்கு அவளோ திமிர யாரை பார்த்து ’ஏய்’ என்று கூறி தாக்கியதாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் அறிந்து சோகனுர் காலணி பகுதியைச் சேர்ந்த 5 பேர் கெளதம் நகர், நாகலம்மன் கோவில் பகுதிக்குச் சென்றபோது அங்குத் திரண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த புலி, அஜித், சிவா, மூக்கன், ராகுல், குமரன், சூர்யா, மதன் ஆகியோர் ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரைக் குறிப்பிட்டு மிக அநாகரீகமாக திட்டிக்கொண்டு கையில் வைத்திருந்த கூரிய ஆயுதங்களால் தாக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், மற்ற மூவரும் காயங்களோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரக்கோணம் இரட்டை படுகொலை தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் ,”அரக்கோணம் அருகே சோகனூரில் இருவர் படுகொலை. மேலும், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம்.
அரசே, பாமக சாதிவெறியர்களை- மணல் திருட்டுக் கும்பலைக் கைது செய். ஏப்-10 அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்” என்றும் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “காவல்துறை அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இக்கொலை குற்றத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை இனங்கண்டு கைது செய்வதோடு அவர்கள்மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரக்கோணம் தலித் இளைஞர்கள் இரட்டை படுகொலைகுறித்து நீலம் பண்பாட்டுமையம்  ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை இயக்குனர் பா.ரஞ்சித் ரீட்விட் செய்துள்ளார். அதில்,  தலித் மக்களுக்கு ஏன் நீதி கிடைப்பதில்லை??அரக்கோணம் சோகனூர் தலித் இளைஞர்களுக்கு நீதி கேட்டு இரவு முழுவதும் மக்களின் போராட்டம் தொடர்கிறது.!! என்றும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இன்று இயக்குநர் பா.ரஞ்சித் சோகனூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்