Aran Sei

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் பெண் நவ்ரா அல் மற்றொஷி – பிரதமர் ரஷீத் அல் மக்தூம் அறிவிப்பு

க்கிய  அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக நவ்ரா அல் மற்றொஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்மால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஷீத் அல் மக்தூம், அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக நவ்ரா அல் மற்றொஷி அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்த விண்கலம் – வரலாறுபடைத்த ஐக்கிய அரபு அமீரகம்

மேலும் அந்த ட்விட்டர் பதிவில் , 4000 விண்ணப்பங்களிலிருந்து இரு விண்வெளி வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்கள் நவ்ரா அல் மற்றொஷி மற்றும் மொஹம்மது அல் முல்லாவும் ஆவர் என்றும் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளிமையத்திற்கு பயிற்சிக்காக அனுப்ப பட உள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்