Aran Sei

தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி – ஏ.ஆர் ரகுமான்

மிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10), சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றுள்ள தென்னிந்திய ஊடகம் பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்றுள்ளார்.

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

கருத்தரங்கிற்கு பின் தன் காரில் ஏறிய ஏ.ஆர் ரகுமானிடம் ‘இந்தியாவிற்கு இந்திதான் இணைப்பு மொழி என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழ்தான் இணைப்பு மொழி என்று பதிலளித்துள்ளார்.

அண்மையில், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த ‘தமிழணங்கு’ என்ற தமிழ் தாயின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்