Aran Sei

‘தொற்றுநோய் உருவாக்கும் நீர்வாழ் உயிரிகள்’ – உயிரிழப்புகள் நேருமென்கிறது ஆய்வு முடிவு

சிரோனோமிட் (chironomids) என்று அழைக்கப்படும் சிறிய வகை நீர்வாழ் பறக்கும் பூச்சிகள் காலரா நுண்ணுயிரிகளை இயற்கையாக உருவாக்கும் அபாயம் கொண்டுள்ளது என்று இந்திய மற்றும் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த நுண்ணுயிரிகள் தொற்று நோயையை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டவை என்றும், இந்த நோய் ஏற்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் சில மணி நேரத்தில் நோயாளிகள் உயிர் இழந்து விடுவார்கள் எனவும் டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது வகையான சிரோனோமிட்களைக் கண்டறிந்துள்ளனர். இந்தச் சிறிய வகை பறக்கும் பூச்சிகள் கொசுக்களைப் போலத் தோற்றமளிக்கும் என்றும், ஆனால் அவை கடிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாம் நினைப்பதைவிட வேகமாக உருகும் பனிக்கட்டிகள் – ஆய்வில் தகவல்

இந்தியாவில் காணப்படும் இரண்டு சிரோனோமிட் இனங்களில் விப்ரியோ காலரா 0139 பரப்பும்  நுண்ணுயிரிகள் உள்ளன என்றும் அவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்டறியப்பட்ட பல விப்ரியோ காலரா நுண்ணுயிரிகளில், 01 மற்றும் 0139 வகை நுண்ணுயிரிகள் மட்டுமே தொற்று நோயை ஏற்படுத்துகின்றன. 01 அல்லது 0139 வகை நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவருக்கு  உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைஃபா பல்கலைக்கழகம் மற்றும் புனே பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வங்காள கங்கை டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் சிரோனோமிட் நுண்ணுயிரிகளின் எணிக்கையை கணக்கெடுக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். 19-ம் நூற்றாண்டிலிருந்து இந்தப் பகுதியில் பல காலரா தொற்று உருவானதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

மரபணு கத்தரிக்கோலுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

“ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை வங்காள டெல்டாவில் உள்ள சிரோனோமிட்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால், இந்தப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தொற்று அதிகரிக்கிறதா என்பதைக் கண்டறியலாம்” என்று ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஹைஃபா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல் பேராசிரியர் மல்கா ஹால்பர்ன் தெரிவித்துள்ளார்.

“காலரா தொற்று நோய்களைப் புரிந்துகொள்வதும் அதனை கட்டுப்படுத்துவதும்தான் இந்த ஆய்வின் நீண்டகால குறிக்கோள்” என்றும் மல்கா ஹால்பர்ன் கூறியுள்ளார்.

மருந்துகளை வழங்குவதன் மூலம் காலராவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டாலும், 40 லட்ச மக்கள் வரை காலராவால் பாதிக்கப்படுவதாகவும், இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் 21,000 முதல் 143,000 மக்களைக் கொல்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்