Aran Sei

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியரானார் நீதா அம்பானி – எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

த்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (பி.எச்.யூ) மகளிர் கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்திற்கு தொழிலதிபர் அம்பானியின் மனைவி நீதா அம்பானியை வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு அந்தப் பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் ராகேஷ் பட்நகரின் இருப்பிடம் முன்பு போராட்டம் நடத்திய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியதோடு, நீதா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்ததாகவும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு – கல்வீச்சு, போலீஸ் தடியடி

பனாரஸ்  பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவு, நீதா அம்பானி நிறுவனர், உரிமையாளர் மற்றும் தலைவராக இருக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும்,  பல்கலைக்கழகத்தின் இரண்டு வருகைதரு பேராசிரியர் பதவிகளுக்குத் தொழிலதிபர் கௌதம் அதானியின் மனைவி ப்ரிதி அதானி மற்றும் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மனைவி உஷா மிட்டல் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக வருகைதரு நீதா அம்பானி வாய்மொழியாகச் சம்மதம் தெரிவித்திருப்பதாக, தைனிக் ஜாக்ரன் செய்தி வெளியிட்டுள்ளது.

பண மோசடி மற்றும் மூடநம்பிக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 அமர்வு நீதிபதிகள் – கைது செய்யப்படவுள்ளனர்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர், “பெண்கள் முன்னேற்றம் தொடர்பான ஆளுமையகளான அருனிமா சின்ஹா, பச்சேந்திரி பால், மேரி  கோம், கிரண் பேடி போன்றோரைக் வருகைதரு பேராசிரியராக அழைக்க வேண்டும்” என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்தார்.

”சமூக அக்கறை கொண்ட தொழிலதிபர்களை ஈடுபடுத்துவது” பல்கலைக்ககழகத்தின் பாரம்பரியம் என பல்கலைக்கழக பேராசியர் குழுத் தலைவர் கௌஷல் கிஷோர் மிஸ்ரா தெரிவித்துள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்