Aran Sei

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மார்ச் 28 தேதி மாணவிகளுக்குத் தேர்வு நடைபெற இருப்பதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவி ஆயிஷாத் ஷிஃபாவின் சார்பாக ஆஜரான தேவ்தத் காமத் வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “தேர்வுகளுக்கு வழக்குக்கும் சம்பந்தமில்லை. எனவே பிரச்னையைப் பரபரப்பாக்க வேண்டாம்என தெரிவித்துள்ளார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது.

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை. எனவே ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என மார்ச் 15 தேதி தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்