Aran Sei

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

credits : op india

மேற்கத்திய திரைகலைஞர்கள் இயேசுவையோ, நபிகளையோ கேலி செய்வதில்லை, ஆனால் இந்தி திரைக்கலைஞர்கள் தொடர்ந்து இந்து கடவுள்களைவே அவமதிப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இந்தியின் முன்னணி நட்சத்திரங்களான  சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்டோர் நடித்த,  தாண்டவ் எனும் 9 பாகங்களை கொண்ட வெப் சீரிஸ் (இணைய வழி தொடர்) அமேசான் தளத்தில் வெளியானது

இந்தியாவில் உள்ள சாதிய சிக்கல்களைப் பற்றி பேசிய படமான ஆர்டிக்கில் 15 (Article 15) திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய கவுரவ் சொலங்கி, தாண்டவ் தொடருக்கு கதாசிரியராக பணியாற்றியுள்ளார். அலி அப்பாஸ் ஜாபர் இந்தத் தொடரை தயாரித்து, இயக்கியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

இந்தத் தொடரில் வரும் காட்சிகள் இந்து கடவுள்களை அவமதித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. சில அமைப்புகள் இந்தத் தொடரை ஒளிபரப்பிய அமேசான் அலுவலகத்தின் முன் போராட்டங்களையும் நடத்தினர்.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

பாஜகவைச் சேர்ந்த மனோஜ் கோடக், ராமேஷ்வர் ஷர்மா, ராம் கடம் ஆகியோர், தாண்டவ் தொடரை தடை செய்யக் கோரியும், ஓடிடி தளங்களுக்கு தணிக்கை குழுவை உருவாக்க கோரியும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அமேசான் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா மெஹ்ரா, எழுத்தாளர் கவுரவ் சொலங்கி மற்றும் பலர் மீது பல்வேறு மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ( வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 505 ( பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) , 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்- விசிக போராட்டம்

அமேசான் இந்தியாவின் உள்ளடக்க தலைவர் அபர்ணா புரோஹித் மீது மட்டும், பத்து மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த இணைய வழித்தொடர் ஒரு புனைவுக்கதை எனவும், எந்தவொரு சமூகத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“தாண்டவ் படக்குழுவினரின் தலையை வெட்டி எடுக்க வேண்டும்” – கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பக்கம் முடக்கம்

இந்த வழக்கு நீதிபதி சித்தார்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அவருடைய மனுவை நிராகரித்துள்ள நீதிபதி, ”மனுதாரர், விழிப்புணர்வு இல்லாமலும், பொறுப்பற்ற முறையிலும், இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான திரைப்படத்தை வெளியிட அனுமத்தித்ததால், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அவரது அடிப்படை வாழ்க்கை உரிமை மற்றும் சுதந்திரத்தையும், நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி பாதுகாக்காது” என தெரிவித்துள்ளார்.

ஓடிடி (OTT) தளங்கள் மீது தார்மீக கண்காணிப்பு : இந்திய தணிக்கை சகாப்தத்தின் சமீபத்திய நிகழ்வு

1893 ஆம் ஆண்டு சிக்காகோவில் விவேகானந்தர் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டிய நீதிபதி, “ஒவ்வொரு மதமும் வெவ்வேறு பாதைகளில் செல்கின்ற நதிகளைப் போன்றவை. ஆனால் அவை அனைத்தும் ஒரே கடலில் ஒன்றிணைகின்றன. இதுவே இறுதி உண்மை அல்லது கடவுள். எனவே, அதில் பிரிவினைவாதம், மதவெறி போன்றவற்றை நீக்க வேண்டும்”. என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

”இந்த இணையவழி தொடர் புனைவுக் கதை என்றாலும், மாற்று மதத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை” என குறிப்பிட்டுள்ள நீதிபதி, ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புக்கு எதிராக பொறுப்பற்று நடந்து, ஏராளமான குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் செயலை கண்மூடித்தனமாக செய்து விட்டு, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்து கடவுள்களை அவமதித்த குற்றச்சாட்டு : தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்கு

இந்த திரைப்படத்தின் பெயராகப் பயன்படுத்தப்படும், “தாண்டவ்” என்னும் சொல்லே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை புண்படுத்தும் எனவும், இந்த வார்த்தை மனிதகுலத்தை உருவாக்கி, அதை ஆக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்ததாக இந்திய மக்களால் நம்பப்படும் சிவனுடன் தொடர்புடையது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

“நாட்டின் குடிமக்களால் சில குற்றங்கள் செய்யப்படும் போதெல்லாம், இந்த நாட்டின் நலனுக்கு விரோதமான சக்திகள் செயல்பட தொடங்குகின்றன” என்றும் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் முன்பு “இந்திய குடிமக்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், இந்தியா வாழ பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்

இந்திய அரசு தேசத்தின் நலனை பாதுகாக்க கடினமான சவாலை எதிர்கொண்டிருப்பதாக கூறியுள்ள நீதிபதி, அரசை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் ”தவறானவை” என்றும் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கட்டமைக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை பார்வதி திரைப்பட சர்ச்சை – தணிக்கை குழு அதிகாரியை நீக்க கோரிக்கை

”மேற்கத்திய திரைகலைஞர்கள் இயேசுவையோ, நபிகளையோ கேலி செய்வதில்லை, ஆனால் இந்தி திரைக்கலைஞர்கள் தொடர்ந்து இந்து கடவுள்களை  அவமதிக்கின்றனர்” என்று தெரிவித்த நீதிபதி, ராம் தேரி கங்கா மய்லி, சத்யம் சிவம் சுந்தரம், பி.கே, ஒ மை காட் போன்ற படங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “வரலாற்று மற்றும் புராண ஆளுமைகளின் (பத்மாவதி) பெயரை  தகர்த்தெறியும் முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக” அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை பார்வதி நடித்த படத்தில் ‘தேசவிரோத கருத்துகள்’ – திரையிட மறுத்த தணிக்கை வாரியம்

”இந்த நாட்டின் சமூகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றி அதிகம் தெரியாத இளம் தலைமுறை, இது (தாண்டவ்) போன்ற திரைபடங்களில் காண்பிக்கப்படுவதை படிப்படியாக நம்பத் தொடங்குகிறது. இதன் மூலம் பல்வேறு வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு ஒன்றுபட்ட தேசமாக வாழும் நமது தேசத்தின் அடிப்படை கருத்துக்கு எதிராக இந்த திரைப்படம் உள்ளது”  என நீதிபதி தெரிவித்துள்ளார்.

“புரட்சியின் கப்பல் போட்டம்கின்” – 95 ஆண்டுகள் கடந்தும், சிறந்த படங்களின் பட்டியலில் நீடிக்க காரணம் என்ன?

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என கூறியுள்ள நீதிபதி, ”ஒருபுறம், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகள் அவமரியாதைக்குரிய விதத்தில் காட்டப்படுவதன் மூலம் புண்படுத்தப்பட்டுள்ளன, மறுபுறம், உயர் சாதியினருக்கும், பட்டியல் சாதியினருக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று நீதிபதி கூறியுள்ளார்.

இந்து கடவுள்களை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபாரூக்கியியையும், நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்