Aran Sei

இறைச்சிக் கூடத்தில் வேலை செய்த 2 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கைது – தீவிரவாத தடுப்புப் படை நடவடிக்கை

மியான்மர் நாட்டைச் சேர்ந்த, ரோஹிங்கியா இஸ்லாமியர்களை, சட்டவிரோதமாக வங்காளதேசம் எல்லை வழியாக இந்தியாவுக்கு அழைத்து வந்து குடியேற உதவிய, இரண்டு ரோஹிங்கியா அகதிகளை, தீவிரவாத தடுப்பு படை, கைது செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு குழு, ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சட்டவிரோதமாக பங்களாதேஷ் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அழைத்து வந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான  ஆணையத்தில் பதிவு செய்கின்றனர் என்றும், அதன் பின்னர் போலியான பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் அட்டை ஆகியவற்றை தயார் செய்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தி, இறைச்சி கூடங்களில் பணிக்கு அமர்த்தி விடுகிறார்கள் என்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

இந்த தகவலின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர், ஹசன் முகமது, சாஹில் முகமது ஆகிய இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

இவர்களிடமிருந்து போலியான ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்ப்போர்ட், ஆதார் அட்டை, பான் அட்டை, ஐந்து லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரசிஸ் செய்தி கூறுகிறது.

 

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

கைது செய்யப்பட்ட இருவரும் மியான்மரின் குடிமகன்கள் என்றும், நான்காண்டுகளுக்கு முன்னர் வங்காளதேசம் வழியாக இந்தியா வந்துள்ளனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும்,  உத்தர பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் அவர்கள்  வேலைப்பார்த்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

மேலும்,  கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர்கள் மீது மோசடி மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்