Aran Sei

‘வேந்தாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – பட்டினி போராட்டம் அறிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்கள்

மே 22 ஆம் தேதியை வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான உலகளாவிய செயல்பாட்டு நாளாக அறிவித்து, கூடவே தூத்துக்குடியில் நீதிக்கான உலகளாவிய இணையவழி தொடர் பட்டினி போராட்டத்தையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், டாக்டர்.அம்பேத்கர் பாடசாலை, தூத்துக்குடி மீனவர்கள் சங்கம் போன்ற 20 அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக, இன்று (மே 10) வெளியிடப்பட்ட அறிவிப்பில், “2018 மே 22-இல் நடத்தப்பட்ட படுகொலைகள் மூன்றாம் ஆண்டினை எட்டும் இவ்வேளையில், இந்த பிரச்சாரத்தின் நோக்கம்: புதிய அரசு வேந்தாந்தா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும் மற்றும் மே 22, 2018 அன்றும் அதற்கு பிறகும் காவல் துறையால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை விரைவுபடுத்துதல் வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதில் பாஜகவிற்கு மறைமுகமாக உதவும் திமுக, அதிமுக – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

“கொரோனா சூழல்களையும் மனதில் நிறுத்தி, அவை தொடர்பான அரசின் விதிமுறை மீறல்கள் எதுவும் நிகழ முடியா விதமாக, இந்த புதிய அறவழி போராட்டமான மே 12 முதல் 22 வரையிலான 11 நாள் உண்ணா நிலை போராட்டம், இணைய தளத்தில் (JustAction.cc வழியாக)  பதிவேற்றம் செய்யப்படும். வீட்டில் இருந்த படியே இந்த பத்து நாட்களில் பங்கேற்பாளர்களின் வசதிபடி இப்போராட்டத்தில் பங்கேற்கலாம்.” என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயங்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்