Aran Sei

வங்கத்தினர் அனைத்தையும் காதலிப்பவர்கள்: யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்புக்கு மஹூவா மொய்த்ரா பதிலடி

மேற்கு வங்கத்தில், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் ரோமியோ தடுப்பு படைகள் உருவாக்கப்படும் என யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு, திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்றைய தினம், மேற்கு வங்க மாநிலத்தில், நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “மேற்கு வங்க மாநிலம் ஏன் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதை மாநில அரசிடம் கேட்க விரும்புகிறேன்.
இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தால், கல்வி மற்றும் போக்குவரத்து பெண்களுக்கு இலவசமாக்கப்படும். பெண்களுக்குப் பின்னால் சுற்றி திரிந்து கொண்டிருப்பவர்களைத் தடுக்க ரோமியோ தடுப்பு படைகள் உருவாக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பாஜக ஆட்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு ரோமியோ தடுப்பு படை உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் (கல்வி நிறுவனங்கள் உட்பட) ரோமியோ தடுப்பு படைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படையில் இரு காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பர்.

‘யோகி ஆதித்யநாத்தின் உரை மூலம் தெரிகிறது கலாச்சார காவலர்களின் அறிவு’ – காங்கிரஸ் விமர்சனம்

ஆனால், இந்த அமைப்பால் பொது மக்களை இழிவுப்படுத்துவதாகவும், தொல்லைக் கொடுப்பதாகவும், பொது இடங்களில் அவமதிப்பதாகவும், கடும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு – யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மஹூவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் ரோமியோ தடுப்பு படைகள் உருவாக்கப்படுமாம். வங்காளிகள் உங்களைப் போன்றவர்கள் அல்ல, நாங்கள் மனதளவில் அனைத்தையும் காதலிப்பவர்கள். வங்காளிகள் இசை, கவிதைகள், இனிப்பான உணவு வகைகள் மற்றும் எங்களது ரோமியாக்கள் அனைத்தையும் விரும்புவர்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்