Aran Sei

கிரிக்கெட்டில் நிறவெறிக்கு எதிரான இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர்

கிரிக்கெட்டில் நிறவெறிக்கு எதிரான இயக்கம் இன்னும் தீவிரமாகவும் அர்த்தத்தோடும் பொருள்மிகுந்ததாகவும் செயல்படுத்தப்பட வேண்டுமென மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

கடந்த ஆண்டு, ஆப்ரோ – அமெரிக்கா கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டடார். இதற்கு எதிராக உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிரான இயக்கத்தின் வழியாக கால்களை மண்டியிட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இவ்வாறு முதன்முதலாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய இரண்டு பன்னாட்டு விளையாட்டு அணிகளில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியும் ஒன்றாகும்.

‘கொரோனா தீவிரமடைந்துள்ள சூழலில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பொறுத்தமற்றது இல்லையா?’ – கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட்

இந்நிலையில், கால்களை மண்டியிட்டுத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர், “இதைப் பற்றி நான் சில விவாதங்களை மேற்கொண்டேன். மேலும், இப்போது இது விளையாட்டுகளுக்கு முன்பு எடுக்கப்படுகிற நீர்த்துப்போன நடவடிக்கை என்று சிலர் உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே, இந்த இயக்கம் குறித்து புதிய முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டுமென நினைக்கிறன்” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ‘கிரிக்கெட்டுக்கு அனுமதியில்லை, லட்சக்கணக்கானோர் கூடும் கும்பமேளாவுக்கும் அனுமதியா?’ – திக்விஜய் சிங் கேள்வி

மேலும், கறுப்பினத்தவர்களின் வாழ்தல் உரிமைக்காக மேற்கொள்ளப்படும் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவது, வெறும் கடமைக்காக மேற்கொள்ளப்படாமல் அதில் சில அர்த்தம் பொதிந்துள்ளது என்று உணர்ந்து செய்யப்படவேண்டுமெனவும் மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்