Aran Sei

பீகார் மாநிலம் : ராஜ் பவனுக்கு அருகில் போராடிய விவசாயிகள் : தடியடி நடத்திய காவல்துறை

Image Credits: The Hindu

பீகார், பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ராஜ் பவனை நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு உழவர் அமைப்புகளில் இருந்தும் இடது சாரி அமைப்புகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் ப்ரேசர் சாலை வழியாக அணிவகுத்துச் சென்றதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் டக் பங்களா சாலையில் காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போராடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் – ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

இந்த பேரணி காந்தி மைதானத்தில் துவங்கியது. அங்கு பல வாசல்கள் இருந்தபோதும் போராட்டக்காரர்கள் ஒரு வழியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே அப்போது போராட்டக்காரர்கள், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக பேரணி தடுத்து நிறுத்தப்படும் என்று அவர்கள் முன்கூட்டியே கணித்தனர். அதே போல் டக் பங்களா சாலையில் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நெரிசல் போன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போராட்டக்காரர்கள் இது அவர்களின் குரலை அடக்குவதற்கான முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக அறிஞர்கள் கூட்டறிக்கை – மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

காந்தி மைதானத்தில் இருந்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டக் பங்களா சாலையை அவர்கள் அடைந்தபோது, ​​அங்கு நிறுத்தப்பட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் அணிவகுப்பை அந்த இடத்திற்கு அப்பால் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இதை கேட்க மறுத்த  போராட்டக்காரர்கள் அங்கு இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராஜ் பவன் வரை செல்ல முயன்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட முக்கியஸ்தர்கள் (விஐபி) பகுதியை நோக்கி அவர்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த சில போராட்டக்காரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் ஒரு சிலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

“டக் பங்களா சாலையில் பலத்த காவல் படைகள் குவிக்கப்பட்டு இருந்தன, அங்கு போராட்டக்காரர்கள் சிலர் கோஷங்களை எழுப்பினர்” எனவும் காவலர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்