Aran Sei

மதமாற்ற தடைச் சட்டத்தால் 17 வயது சிறுவன் கைது: அரசியலமைப்பை மீறுகிறதா உத்தர பிரதேசம்?

credits : PTI

உத்தர பிரதேசத்தின் மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறையாக கைது செய்யப்படும்  சிறுவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசியாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மருந்தகத்துக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறி, அந்தப் பையனுடன் காரில் சென்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தச் சிறுமியின் வீட்டில்  தெரிவித்துள்ளனர்.

பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடைக்குச் சென்ற பெண்ணை கல்யாணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளதாக சிறுமியின் தாயார் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவருடைய மகளை அந்தச் சிறுவன் தன்னுடைய (இஸ்லாம்) மதத்திற்கு மதமாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் அந்தச் சிறுமியின் தாயார் புகாரில் தெரிவித்துள்ளார்.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ரத்து செய் : நூறு முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்

அந்தச் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அந்தச் சிறுவன் மீதும் அவரின் நண்பர்கள் இரண்டு பேர் மீதும் (17 வயது சிறுவர்கள்) கடத்தல், சதி, மதமாற்ற வற்புறுத்தியது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தச் சிறுமியின் நண்பரை விசாரித்ததன் மூலம் இவர்கள் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று, அந்தச் சிறுவனையும் சிறுமியையும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தச் சிறுவன் சிறார் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் இன்னும் சிறார் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?’ – மதமாற்ற விவகாரத்தில் உ.பி., அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

உத்தர பிரதேசத்தின் மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இது வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்