Aran Sei

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய் பிணை மனு – ரத்து செய்த கௌஹாத்தி உயர் நீதிமன்றம்

Image Credits: Pratidin Time

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக விவசாய உரிமை ஆர்வலர் அகில் கோகோய் மீது தேசிய புலானாய்வு அமைப்பு வழக்கு பதிந்தது. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கைதானார். தற்போது பிணஅவர் தாக்கல் செய்த மனுவைக் கௌஹாத்தி உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வரவிருக்கும் அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பங்கேற்கும் வகையில் அகில் கோகோய் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று நம்பிக்கையுடன் இருந்த அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என்று கௌரி லங்கேஷ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“பிணை மறுப்பதற்கான சரியான காரணங்களை அறிய, உத்தரவின் நகலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அகில் கோகோய்க்கு பிணை பெறுவதற்காக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்று அகில் கோகோயின் ஆலோசகரான சாந்தனு போர்த்தாகூர் கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களில் பங்கு வகித்ததற்காகக் கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி (கேஎம்எஸ்எஸ்) எனும் விவசாய சங்கத்தின் நிறுவனர் அகில் கோகோய் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன . அதில் இந்த வழக்கைத் தவிர தேசிய புலானாய்வு அமைப்பு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு உட்பட மற்ற அணைத்து வழக்குகளிலும் அகில் பிணை பெற்றுள்ளார்.

இந்த வழக்கு முதலில் கௌஹாத்தியில் உள்ள சந்த்மாரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், அவர் மீது தேசத்துரோகம், குற்றவியல் சதி, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்