Aran Sei

மீண்டும் ஓர் ஆணவக்கொலை – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வேண்டுகோள்

ன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தில், பிறந்தவர் சுரேஷ்குமார் த/பெ சொர்ணப்பன். பி.காம் படித்த 27 வயதுடைய சுரேஷ்குமார், பக்கத்து ஊரான காட்டுப்புதூர் ஆதிக்க சமூகத்தை சார்ந்த நீலகண்ட பிள்ளையின் மகள் தங்கநிலாவோடு கடந்த எட்டு வருடங்களாக காதல் புரிந்ததாக கூறப்படுகிறது.

தங்கநிலாவும் சுரேஷ்குமார் குடும்பத்தோடு அடிக்கடி  அலைபேசி வாயிலாக பேசிவந்துள்ளார். இந்நிலையில், தங்க நிலாவுக்கு அவருடைய குடும்பத்தினர் சுயசாதியில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.இதை சுரேஷ்குமாருக்கு தெரிவித்த தங்க நிலா, தம்முடைய வீட்டிற்கு வந்துபேசும்படி அழைத்துள்ளார்.

‘இந்தி தெரியாது; மாநில மொழி தெரிந்தவரே தலைமைச் செயலாளராக வேண்டும்’ – அமித் ஷாவுக்கு மிசோராம் முதல்வர் கடிதம்

இதற்கிடையில், கடந்த 18/9/2021 அன்று, தூவாளை வழக்கறிஞர் பழனி என்பவர் வீட்டில், சுரேஷ்குமார் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுகிறார். தம்முடைய உறவினர்கள் சுமார் 15 பேருடன் சுரேஷ்குமார் செல்கிறார் அங்கே, பெண் வீட்டார் தரப்பில் கலந்துகொண்ட பெண்ணின்  அண்ணன் தாமோதரன் மற்றும் பலர் சாதி ரீதியாக இழிவு செய்ததோடு, கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று (7/11/2021) மதியம் 12 மணிவாக்கில் பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜோசப் ராஜ் என்பவர் சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்து, சுரேஷ் குமார் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த உதவி ஆய்வாளரோடு தங்கநிலாவின் அண்ணன் தாமோதரன் மற்றும் இன்னொரு அண்ணனும் வந்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து சென்ற சுரேஷ்குமார், காவல் நிலையத்திற்கு போய் சேரவில்லை. வழக்கறிஞரோடு காவல் நிலையத்திற்கு சென்று சுரேஷ்குமரின் சகோதரர்கள் சுரேஷ்குமாரை காணததால் தேடி சென்றுள்ளனர்.

ரஃபேல் விமான ஊழல்: பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கசிந்த ரகசியம் – ஆதாரம் இருந்தம் நடவடிக்கை எடுக்காத சிபிஐ

சுரேஷ்குமார்  அலைபேசியை தொடர்பு கொண்டபோது, அது அணைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடியபோது, சுமார் 5:30 மணிவாக்கில் தங்க நிலா ஊரான காட்டுப்புதூர் அருகிலுள்ள, ஆலடி சிவன்கோயில் தெப்பக்குளம் சாலையோரத்தில் சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனம் கிடந்ததைக் கண்ட சுரேஷ்குமாரின் சகோதரர்கள், அருகில் தேடியபோது,  தோட்டத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார் சுரேஷ்குமார். அவருடைய அருகில் அவருடைய அலைபேசி சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்த போது, அதிலிருந்த சிம்கார்டு மற்றும் மெமரி கார்டு ஆகியவை காணாமல் போயிருந்தது.

‘கேள்வி எழுப்பினால் தேசதுரோகி, அர்பன் நக்சல் என்று முத்திரை குத்துகிறது ஒன்றிய அரசு’ – தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்

சுரேஷ்குமாரை எழுப்பி பார்த்த சகோதரர்கள், அவரை மீட்டு அருகிலுள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தபோது, சுரேஷ்குமார் இறந்துவிட்டார் என்று மருத்துவர் கூறியுள்ளார்.தற்போது, உடல்கூறாய்வு நடக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. காவல்துறை தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்