Aran Sei

‘என் கடைசி ஆசையாக விவசாய சட்டங்களை நீக்குங்கள்’ – தற்கொலைக்கு முன் விவசாயியின் உருக்கமான கடிதம்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, டெல்லி எல்லையில் போராடி வந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று (மார்ச் 7), ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான விவசாயி, விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் டெல்லி திக்ரி எல்லையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தால் மனமுடைந்து சென்னையில் ஒருவர் தற்கொலை – விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கடிதம்

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர், தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் விட்டு சென்றுள்ளார்.

“தற்கொலை செய்துக்கொண்ட ராஜ்பீர், ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.” என்று பகதர்கர் நகர காவல் நிலைய அதிகாரி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

“தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள்” – பாஜக அமைச்சர்

விவசாயி ராஜ்பீர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில், மூன்று விவசாய சட்டங்கள்தான், அவரை இந்தக் கடின முடிவை எடுக்கக் காரணமாக இருந்தது என்றும் இச்சட்டங்களை ரத்து செய்வதன் வழியாக மத்திய அரசு தனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த மாதம், ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த 52 வயதான கரம்வீர் சிங், திக்ரி எல்லையிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதே திக்ரி எல்லையில், இருவாரங்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விவசாயிகளின் மரணம் : ‘கண்ணீரை துடைக்காமல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுகிறது மோடி அரசு’

டிசம்பர் மாதம் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் விஷம் குடித்து இறந்தார். முன்னதாகச் சீக்கிய மத போதகரான சாந்த் ராம் சிங், சிங்கு எல்லைப்பகுதியில், ”விவசாயிகள் வலியைத் தாங்க முடியவில்லை” என்று கூறி தற்கொலை செய்துகொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்