Aran Sei

டெல்லியில் போராடும் விவசாயிகள்: மற்றும் ஒரு உயிரிழப்பு

Image The Indian Express

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவந்த பஞ்சாபின் துங்வாலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இன்று திக்ரியில் (டெல்லி-பகதூர்கர் எல்லை) உயிரிழந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பகதூர்கர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 37 வயதான ஜெய் சிங் எனும் விவசாயி மருத்துவ பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு

“ஜெய் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்தார். ஆரம்பத்தில், அவசர சிகிச்சை பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு, இது மாரடைப்பு என்று தோன்றியது. எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் தான் மரணத்திற்கான இறுதி காரணம் கண்டறியப்படும்” என்று பகதூர்கர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி சஞ்சய் தஹியா தெரிவித்துள்ளார்.

“அதிகாலை 4 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக நான் ஜெய் சிங்கை எழுப்பினேன், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு, இரவு நாங்கள் தற்காலிக கூடாரத்தில் ஒன்றாக உறங்கினோம்” என்று விவசாயி விக்கர் சிங் கூறியுள்ளார்.

22 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி போக்குவரத்து

“நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் பங்கேற்க ஜெயும் நானும் திக்ரிக்கு வந்திருந்தோம். நாங்கள் டிசம்பர் 15 அன்று இங்கு வந்தோம், அதன் பின்னர் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஜெய்க்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவர் தனது கிராமத்தில் கிட்டத்தட்ட 2 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நிலத்தை வைத்திருந்தார்” என்று விக்கர் சிங் தெரிவித்துள்ளார்.

ஜெய் எழும்பவில்லை என்பதை அறிந்த பின்னர், காவலர்களுக்குத் தகவல் அளித்து அவரை பகதர்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகச் சுக்ஜீந்தர் சிங் எனும் விவசாயி கூறியுள்ளார்.

கடந்த 20 நாட்களாக டெல்லியில் நடத்திவரும் போராட்டத்தின்போது குறைந்தது 22 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக விவசாயிகள் உயிரிழந்தபோதிலும் மத்திய அரசின் செயல்பட தன்மை குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்