Aran Sei

அதிருப்தியில் மேற்குவங்க பாஜகவினர் – கட்சித் தாவுகிறாரா பாஜக எம்.எல்.ஏ?

ட்சியின் தலைமைக்கு எதிராக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக சட்டபேரவை உறுப்பினர் கிருஷ்ண கல்யாணி, கட்சிமீதான என்னுடைய குற்றச்சாட்டுகளைச் சரிசெய்யாவிட்டால், தனது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 19), மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள கிருஷ்ண கல்யாணி, “பாஜகவை விட்டு வெளியேறியவர்களிடம், கட்சித் தலைமையால் கண்டுக்கொள்ளப்படாத மனக்குறைகள் பல இருக்கலாம். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களிலிருந்தும் நான் ஒதுக்கிக் கொண்டேன். நான் எழுப்பிய பிரச்சனைகளுக்குக் கட்சித் தலைமை தீர்வு காண வேண்டும். இல்லையெனில், நான் எனது எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய நிலைவரும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது மனக்குறைகள் என்னவென்று கிருஷ்ண கல்யாணி கூறவில்லை.

உத்திரபிரதேச அரசு விளம்பரத்தில் மேற்கு வங்க பாலத்தின் புகைப்படம் – யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

வேறு கட்சியில் இணையும் திட்டமிருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அது குறித்து யோசித்து வருவதாகவும், சரியான நேரத்தில் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாஜகவில் இருந்து வெளியேறுபவர்கள் எந்தச் சூழ்நிலையில் வெளியேறுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண கல்யாணி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ மற்றும் முகுல் ராய் உள்ளிட்ட நான்கு சட்டபேரவை உறுப்பினர்கள், மே 2 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பாஜகவில் இருந்து வெளியேறி, மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்கள்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்