Aran Sei

தொடர்ந்து சரிவை சந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் – தேர்தல் ஆணையம் தகவல்

ந்தியத் தேசிய காங்கிரஸின் ஆண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2020-2021 இல் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 2018-2019 இல் ரூ.918.03 கோடியாக இருந்த காங்கிரஸின் ஆண்டு வருமானம் 2019-2020 இல் ரூ.682.21 கோடியாகவும், 2020-2021 இல் ரூ.285 கோடியாகவும் குறைந்துள்ளது.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் 2020-2021 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்குகளைத் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி அதிகளவிலான நன்கொடைகளை கூப்பன்கள் மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.156.90 கோடி நன்கொடையை கூப்பன்கள் மூலம் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் ரூ.998.15 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் செலவு, 2020-2021 இல் ரூ.209 கோடியாகக் குறைந்துள்ளது.

4,847 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

பாஜகவின் வருமான அறிக்கையை தேர்தல் ஆணையம் இன்னும் கொடுக்கவில்லை. ஆனால், 2019-2020 இல் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.3,623.28 கொடியாகவும், செலவு ரூ.1,651.02 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

நடிகர் விஜய் குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கு எதிர்வினை.

நல்லா உருட்டுறீங்க பாண்டே…. மேலும் தெரிந்து கொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்