Aran Sei

கொரோனா பரவல் எதிரொலியால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

ந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிக பாதிப்புகளை உண்டாக்கியுள்ள சூழலில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு வரும் மே 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக தி மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சரக்கு விமான போக்குவரத்துக்கும், குறிப்பிட சில நாடுகள் விமானங்கள் இயக்குவதற்கும் தடையில்லை என்றும் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவை விரட்ட விமான நிலையத்தில் பூஜை: பாஜக அமைச்சர் தலைமையில் ஊழியர்கள் பங்கேற்பு

கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியிலிருந்து பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 30 முடிவடைந்த விமான போக்குவரத்து தடையை மே 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசு – எஞ்சிய பங்குகளையும் விற்க முடிவு

ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, ஈரான், இத்தாலி, குவைத், நியூசிலாந்து, ஓமான், சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்குச் பயணிப்பதற்கும், திரும்புவதற்கும் தடைவிதித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்