Aran Sei

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனக்குழுவின் உறுப்பினராக ஜே.என்.யூ துணைவேந்தர் – ஆளுநர் உத்தரவு

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனக்குழுவின் உறுப்பினராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவைத் தமிழக ஆளுனர் நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

தற்போது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சூரப்பாவின் பதவிகாலம் வருகின்ற ஏப்ரல் 11 அன்று முடிவடைய உள்ளது. இந்நிலையில், நியமனக்குழுவின் உறுப்பினராகப் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நிறுத்தம்: ’69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சி’ – திருமாவளவன்

ஏற்கனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனக் குழு உறுப்பினராகப் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டபோது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மேலும், இந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜனை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவும், தமிழக அரசின் பிரதிநிதியாக குடிமைப்பணியாளர்(ஐ.ஏ.எஸ்) ஷீலா ராணி சுங்கத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு – அண்ணா பல்கலைக் கழகத்திலும் அமலானது

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்