Aran Sei

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

credits : satyavijayi

ண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா பணிக்காலத்தில் தவறுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குத் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகாரளித்தார்.

அந்தப் புகாரில், “அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்” என்று சூரப்பா மீதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாரிகளின் நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

“அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டும்” (save anna university) என்ற அமைப்பைச் சார்ந்த சி.வரதராஜனும், செல்லதுரையும், துணை வேந்தர் சூரப்பா முறைகேடு செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆர்.ஆதிகேசவன் எனும் நபர், சூரப்பாவின் மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியது குறித்துப் புகாரளித்தார்.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, மகளைப் பணியில் சேர்த்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த நிலையில் சூரப்பாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவைத் தமிழக அரசு அமைத்தது.

’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

சூரப்பாவின் பதவிக்காலத்தில் கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பில் செய்யப்பட்ட தற்காலிக நியமனங்கள் குறித்தும் கட்டணம், உதவி, நன்கொடைகள் மற்றும் மானியங்களில் பல்கலைக்கழகத்தால் பெறப்பட்ட தொகைகள் குறித்தும் நீதிபதி விசாரிப்பாரெனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

“இது போன்ற குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க பொருத்தமான வழிமுறைகளை அந்தக் குழு பரிந்துரைக்கும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.

எம்.டெக் உயிரி தொழில்நுட்ப படிப்புக்கு மாணவர் சேர்க்கை உடனே நடத்த வேண்டும்: உயர்கல்வி முதன்மை செயலருக்கு திருமாவளவன் கடிதம்

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சூரப்பா, தான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை எனவும் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

69% இடஒதுக்கீடு மீறலா?: என்ன நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? – தமிழ் நாசர்

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணைக் குழுவுக்கு அரசு உத்தரவிட்டது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி விசாரணைக் குழுவின் காலம் பிப்ரவரி 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

‘முதல்வர் வேட்பாளராக சூரப்பாவும் போட்டியிடுகிறாரோ?’: உதயநிதி

இந்நிலையில், மூன்று மாத விசாரணைக்குப் பிறகு, நீதிபதி கலையரசன், நேற்றைய தினம் “அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது புகார் அளித்தவர்களை விசாரணை செய்துள்ளோம். பல்கலைக்கழகத்தின் அலுவலர்களை விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

”துணைவேந்தர் பொறுப்புமீது கூறப்பட்ட புகார்களுக்குத் தேவையான முகாந்திரம் உள்ளது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறுவதில் உண்மை இல்லை. சூரப்பா பணிக்காலத்தில் தவறுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

“சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

”அதனடிப்படையில் அடுத்த வாரத்தில் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும். விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கி விரைவில் அரசாணை கிடைக்கும்” என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

`சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா’ – விசாரணை தொடக்கம்

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதாகத் தமிழகத்தின் ஆளும் கட்சி எதிர்கட்சிகள் என அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, சூரப்பா திட்டமிட்டு குறிவைக்கப்பட்டுள்ளார் எனவும் அவருக்கு எதிரான அடக்குமுறைகளை ”நான் கேட்பேன்” எனவும் வீடியோ வழியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருந்தார். சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது நீதிபதி கலையரசன் குழுவால் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் கமலஹாசன் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்