Aran Sei

கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு தீ வைப்பு – காவல்துறை விசாரணை

ள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகர் பகுதிக்கு அருகில்  உள்ள மாதவச்சேரி கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இந்த சிலை  1978-ம் ஆண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பி பச்சையப்பன் தலைமையில் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளின்படி அண்ணா சிலை முழுவதுமாக மறைக்கப்பட்டு காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது .நேற்று வடக்கநந்தல் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தீ  வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திமுக ஒன்றியச் செயலர்  எஸ்.பி அரவிந்தன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்  உதவியுடன் சிலை எரிந்த பகுதிகளை தண்ணீரால் கழுவி தூய்மைப் படுத்தினார்.

தொடர்ந்து சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகாரும் வழங்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்