Aran Sei

‘இதுவே எனது இறுதி போராட்டமாக இருக்கும்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே

Image Credits: Outlook India

மூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால், உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். இதுவே தனது “இறுதி போராட்டமாக” இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிமைக்கு போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா – பாஜகவிற்கு வலுக்கும் கண்டனம்

மகாராஷ்டிரா, அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்காகப் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், ஆனால் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

“அரசு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறது, இதன் காரணமாக எனக்கு அரசின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. எனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பார்ப்போம். அவர்கள் ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே ஜனவரி இறுதி வரை அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன். எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இதுவே எனது இறுதி போராட்டமாக இருக்கும்” என்று 83 வயதான அவர் தெரிவித்துள்ளார்.

ஜியோ கோபுரங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் விவசாயிகள் – தவிர்க்குமாறு சங்கங்கள் கோரிக்கை

டிசம்பர் 14-ம் தேதி, அன்னா ஹசாரே மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வேளாண் பொருட்களின் விலையை நிர்ணயிக்க விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக எச்சரித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான ஹரிபாவ் பாகடே, சமீபத்தில் அன்னா ஹசாரேவை சந்தித்து, மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களின் விவரங்களை விளக்கியுள்ளார்.

முன்னதாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி  டிசம்பர் 8-ம் தேதி பாரத் பந்த் நடத்துவதற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனை ஏற்ற அண்ணா ஹசாரே அன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்