திகார் மத்திய சிறை எண் 4ல் கடந்த மாதம் உயிரிழந்த கைதி அங்கித் குஜ்ஜார் உடலில் இருந்த காயங்களின் தன்மையைப் பார்க்கும்போது, அவரது மரணம் காவல்துறை வன்முறை என்பது தெளிவாக தெரிகிறது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜ்ஜார் மரணம் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுத்துத் துறைக்கு மாற்றக் கோரி அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுமீதான உத்தரவை ஒத்துவைத்துள்ள நீதிபதி முக்தா குப்தா, இந்தச் சம்பவத்தில் சிறை அதிகாரிகள் பணம் பறிக்கும் பெரிய பிரச்னை சம்பந்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
குஜ்ஜாரிடம் இருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ”செல்போனை மீட்ட அதிகாரி பணம் கேட்டுள்ளார். இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் குஜ்ஜாரின் குடும்பத்திடம் இருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மிகவும் தீவிரமானது. இறந்தவருக்கு என்ன நிகழ்ந்ததோ, அது மற்றவருக்கும் நிகழ்ந்திருக்க கூடும்” என கூறியுள்ளார்.
மேலும், “இந்த மரணம் காவல்துறை வன்முறையால் நிகழ்ந்தது என்பது தெளிவாக தெரிகிறது… மனுவில் இது காவல் வன்முறை வழக்கு மற்றும் இதில் யார் செய்துள்ளனர் என்பதும் மிகவும் தெளிவாக உள்ளது” என நீதிபதி முக்தா குப்தா குறிப்பிட்டுள்ளார்.
29 வயதான குஜ்ஜார் திகார் சிறையில், சிறை எண் 4கில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.