இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருமாக ஆண்ட்ரூ டை, “நாடு சுகாதார நெருக்கடியில் இருக்கும்போது, கிரிக்கெட்டிற்காக பணம் செலவழிப்பது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கவும், நம்பிக்கை அளிக்கவும் ஐபிஎல் போட்டிகளிலால் முடிந்தால், போட்டிகளைத் தொடரலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இந்திய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நாட்டு மகக்ளுக்கு மருத்துவமனையில், இடம் கிடைக்காத இந்த இக்கட்டான நேரத்தில், ஐபிஎல் நிர்வாகம், அணிகளின் உரிமையாளர்கள், அரசாங்கம் ஆகியோர் எவ்வாறு இவ்வளவு தொகையைச் செலவிடுகின்றனர்” என டை கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஆனால் இது அனைவரின் உணர்வுகள் என்பதல்ல என்பதை நான் அறிவேன், எல்லா கோணங்களிலிருந்தும் வரும் அனைவரின் கருத்துக்களையும் நான் முழுமையாக வரவேற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
”தற்போது ஐபிஎல்லில் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர், ஆனால் எவ்வளவு நாட்களுக்குப் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.