Aran Sei

ஆந்திராவில் பொய் வழக்கில் கைது செய்து காவல்துறை சித்திரவதை செய்ததாக பெண் குற்றசாட்டு : தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்

ந்திர மாநிலம் லட்சுமி நகர் காலணியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண் ஒருவர் “தன் வீட்டின் உரிமையாளர் கொடுத்த பொய்யான திருட்டு புகாரை ஒப்புக்கொள்ளும்படி சித்தூர் காவல் நிலைய காவலர்கள் தாக்கியதாகத் தெலுங்கு தேசம் கட்சி ட்விட்டரில் பகிர்ந்த காணொளியில் பேசியுள்ளார்.

இந்த சம்பவத்தை “காட்டுமிராண்டித்தனம்” என்று தெலுங்கு தேசம் கட்சி கண்டித்துள்ளது.

“சித்தூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வேணுகோபால் ரெட்டி வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அண்மையில் ஒரு நாள் அவர்களின் வீட்டில் 2 இலட்சம் பணம் காணாமல் போனது பற்றி வேணுகோபால் ரெட்டியும் அவரது மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது பணம் காணாமல் போனது குறித்து என்னிடம் அவர்கள் விசாரித்ததாகவும், பணம் காணாமல் போனது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களிடம் பதிலளித்ததாகவும்” உமாமகேஸ்வரி அந்த காணொளியில் கூறியுள்ளார்.

ஆனால் வேணுகோபால் ரெட்டி பணத்தைத் திருடியதாக உமாமகேஸ்வரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து உமாமகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.அதன் பிறகு உமாமகேஸ்வரி, அவரது கணவர் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.

“அந்த விசாரணையில் காவல்துறை என்னைத் துன்புறுத்தினார்கள், தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினார்கள், காவல்நிலையத்தில் உள்ள ஒரு இருட்டு அறையில் என்னைச் சித்திரவதை செய்தார்கள். இரவு வெகுநேரம் ஆகியும் காவல்துறை என்னை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை” என்று உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.

வேணுகோபால் ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் புகாரின் அடிப்படையில், உமாமகேஸ்வரிக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி விசாரித்ததில் அவள் 2 லட்சம் ரூபாயைத் திருடியதை ஒப்புக்கொண்டால், அந்த பணம் அவரது கணவர் தீனாவிடம் இருப்பதாக அவள் கூறினாள். ஆனால் இப்போது இந்த காணொளியில் அவள் இப்படிப் பேசுவதில் எந்த உண்மையுமில்லை என்று காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்