Aran Sei

விவசாய சட்டங்களை நீக்க கோரி பாரத் பந்த்: ஆந்திர மாநில அரசு ஆதரவு

விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவையும் மூன்று விவசாய சட்டங்களையும் எதிர்த்து, மார்ச் 26 அன்று நடக்கவுள்ள பாரத் பந்திற்கு ஆந்திர பிரதேச அரசு ஆதரவு வழங்கியுள்ளது.

அனைத்து அரசு நிறுவனங்களும், அரசு பேருந்துகளும் மதியம் 1 மணிக்குப் பிறகே இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பந்த்தால், மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக தடைபடாது. அனைத்து அவசர சுகாதார சேவைகளும் வழக்கம் போல் செயல்படவுள்ளது.

விவசாயிகளின் பாரத் பந்திற்கு சிபிஐ(மாவோயிஸ்டுகள்) ஆதரவு : மக்களும் இணைந்து போராட அழைப்பு

எஃகு ஆலையைத் தனியார்மயமாக்குவதற்கு ஆந்திர மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறும் அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா, “முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், எஃகு ஆலையின் பிரச்சனையைத் தீர்க்க வேறு அலோசனைகளை வழங்கியிருந்தார். மேலும், ஆலையின் முழு பொறுப்பையும் ஏற்க மாநில அரசு முன்வந்த போதிலும், மத்திய அரசு அபத்தமான முறையில் திறந்த ஏலத்தை நடத்தி, அதில் பங்கேற்று ஏலம் எடுத்துக்கொள்ளுமாறு மாநில அரசை வற்புறுத்தியது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மார்ச் 26 ஆம் தேதி நடக்கவுள்ள பாரத் பந்தை பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வண்ணம் அமைதியான வழியில் நடத்த, மாநிலத்தில் உள்ள விவசாயிகள் சங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கட்சியான தெலுங்கு தேச கட்சியும் பாரத் பந்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்