Aran Sei

‘அரசை விமர்சித்த தொலைக்காட்சிகள் மீது தேசத்துரோக வழக்கா? – ஆந்திர அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம்

ந்திரபிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை விமர்சனம் செய்த செய்தி தொலைக்காட்சிகளான டிவி 5 மற்றும் எபிஎன் ஆந்திர ஜோதி ஆகியவற்றின் மீது அம்மாநில அரசு மறைமுகமாகத் தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தொலைக்காட்சிகளை கேபிள் டிவி வழியாக இயங்கவில்லை என்றும், நேரடி வீட்டு சேவைகளின் வழியாக மட்டுமே இயங்கி வருவதாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கூட்டாட்சி மீதான பாஜகவின் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ : 14 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

இதுகுறித்து தெரிவித்துள்ள எபிஎன் ஆந்திர ஜோதி அதிகாரி,”இந்த நடவடிக்கை கடந்த செப்டம்பர் 2020 ஆம் ஆண்டே தொடங்கியது. கேபிள் டிவி துறையினர் தொலைக்காட்சியைத் தடை செய்ய அரசு அழுத்தம் தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், தொலைத் தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கேபிள் டிவியில் தொலைக்காட்சி தடைசெய்யப்படவில்லை.  சில தொழில்நுட்ப இடையூறுகள் மட்டுமே எழுந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். எனினும், தொலைக்காட்சி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், அவை இணங்கவில்லை” என்றும் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறியுள்ளது.

இதே போன்று, அரசின் அழுத்தத்திற்கு பின்னர், தங்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்புதல் நிறுத்தப்பட்டுள்ளதாக டிவி 5 தொலைக்காட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கிறது.

ரூ.826 கோடி மோசடி: ஜெகன்மோகன் கட்சி எம்.பி மீது வழக்கு

மேலும், கடந்த மே 15 அன்று, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரகு ராம கிருஷ்ண ராஜுவின் பேச்சை ஒளிபரப்பிய டிவி 5 மற்றும் எபிஎன் ஆகிய தொலைக்காட்சிகள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொலைக்காட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்