Aran Sei

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

மிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பபடுவதை நிறுத்துங்கள் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழகத்தில் நாளொன்றுக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் மட்டுமே உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஐந்து மடங்காக உயர்ந்திருக்கும் ஆக்சிஜன் தேவை – நாளொன்றுக்கு 100 டன் தேவைப்படுவதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்

இதனால் தமிழகத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பட்டு வருவதை நிறுத்திடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியைவிட தேவை குறைவாக இருப்பதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஏப்ரல் 21 ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்