Aran Sei

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மராட்டிய மாநில காங்கிரஸ்: நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி என அன்புமணி வரவேற்பு

காராஷ்டிராவுக்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது, நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி என்று பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ர மாநில அரசும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “நீட் தேர்வானது அநீதி மட்டுமல்லாது ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுகிறது. அத்தோடு, மாநில கல்வி முறையில் படித்த மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. இவர்களில் பலர் பொருளாதார ரீதியாக பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

இது தொடர்பாக, இன்று (செப்டம்பர் 22) தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, “நீட் சமூக நீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் நீட் தேர்வைத் திணித்த காங்கிரஸ் கட்சியினரே அதன் தீமைகளை உணரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்து. நல்ல திருப்பம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசத் தொடங்கப் போகிறது என்பதையே மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காட்டுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

“நீட் மிகப்பெரிய சமூக அநீதி… அது ஒரு மாணவர் கொல்லி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த உண்மையை மத்திய அரசு உணர வேண்டும். தமிழகம் உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும்.” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதற்கு ஏ.கே.ராஜன் குழுவின் புள்ளிவிவரமே போதுமானது’ – கமல்ஹாசன்

மகாராஷ்டிராவில் சிவ சேனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்