வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு மாநிலங்களவை உறுப்பினரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 24), அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “சமூகநீதியை நிலைநாட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
சமூகநீதியை நிலைநாட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை!(1/3)#CasteBasedCensus
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 24, 2021
“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது என்றும் இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.