Aran Sei

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

credits : the indian express

ந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டுகளின் சித்தாந்தங்கள், பயிற்சிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்த ஆவணங்களைச் சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் ஆனந்த் டெல்டும்ப்டே பகிர்ந்து கொண்டதாக” தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

ஐஐடி பேராசிரியரும் பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருப்பவருமான, ஆனந்த் டெல்டும்ப்டே, ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாவோயிச சித்தாந்தங்களுக்கு தான் எதிரானவர் என்றும் தன்னை அதனுடன் தொடர்புபடுத்தி பேசுவதே அபத்தமானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு: மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார் கவிஞர் வரவர ராவ்

இதற்கு, பதில் மனு தாக்கல் செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), ”இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டுகளின் சித்தாந்தங்கள், பயிற்சிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றிய ஆவணங்களை சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் ஆனந்த் டெல்டும்ப்டே பகிர்ந்து கொண்டதாக” தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவுக்கு ஆறு மாதம் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும், மாவோயிஸ்டுகளுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆனந்த் டெல்டும்ப்டேவின் சகோதரர் மிலிந்த் டெல்டும்ப்டேவுடன், நாக்பூர், பூனே, போபால், இந்தூர் போன்ற  நகர்ப்புற பகுதிகளுக்கு ஆனந்த் டெல்டும்டே சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் தேசிய புலனாய்வு முகமையின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக தன்னுடைய சகோதரருடன் தொடர்பில் இல்லையென ஆனந்த் டெல்டும்ப்டே தன்னுடைய மனுவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்

மேலும், ரோனா வில்சன் மடிக்கணிணியில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அந்தக் கடிதத்தில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரிசில் நடந்த மனித உரிமை மாநாட்டில் ஆனந்த் டெல்டும்ப்டே கலந்துக் கொண்டது, தலித் பிரச்சனைகள் தொடர்பாக டெல்டும்ப்டே பேசியது எல்லாம், உள்நாட்டில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையிலிருந்து விலகுவதற்காகத்தான் என்று தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

பீமா கோரோகான் வழக்கு – சிறையில் உள்ள சுதா பரத்வாஜ் புத்தகங்கள் பெற என்ஐஏ நீதிமன்றம் அனுமதி

மேலும் ”இந்தக் காலகட்டத்தில் தான் பீமா கோரேகான் சம்பவத்திற்குப் பிறகு உள்ளூர் கலவரங்கள் நடக்கத் தொடங்கியது. எரிகின்ற தீ அணையாமல் இருக்க, அறிவுசார் தோழர்களுக்கு அறிவுறுத்தியுபடி அந்தக் கடிதம் முடிந்தது” என்றும்  தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

பீமா கோரேகான் : புனைவு வரலாறாகும் ஆபத்து – ஆனந்த் டெல்டும்டே

கடந்த மாதம், அடையாளம் தெரியாதவர்களால் ரோனா வில்சனின் மடிக்கணினி 22 மாதங்களாக ஹேக் செய்யப்பட்டு, அவருக்குத் தெரியாமலேயே அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணித்ததுடன், சில கோப்புகளையும் அவருடைய கணிணியில் பதிவேற்றியுள்ளனர் என்பது அமெரிக்காவை சேர்ந்த அர்சனல் கன்சல்டிங் நிறுவனத்தால் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்