Aran Sei

சகோதரர் மறைவால் தாயை சந்திக்க பிணை கோரிய ஆனந்த் டெல்டும்டே – நிராகரித்த நீதிமன்றம்

Image Credit: https://commons.wikimedia.org/wiki/User:SerChevalerie;

ல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே தனது சகோதரர் மிலிந்த் டெல்டும்டே நவம்பர் 13-ம் தேதி கொல்லப்பட்டதை தொடர்ந்து தேசிய புலணாய்வு முகமையின் சிறப்பு  நீதிமன்றத்தில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.இ.கோதாலிகர் நிராகரித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய புலணாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

‘தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சிபிஎஸ்இ’ – பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நவம்பர் 13-ம் தேதி நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவர்.

மலிந்த டெல்டும்டே தனது உடன்பிறந்தவர்களில் மூத்தவர் என்றும், அவரது தாயாருக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது என்றும், அத்தகைய தருணத்தில், அவரது இருப்பு அவரது தாய் மற்றும் உடன்பிறப்புகளுக்கு “பெரும் ஆதரவாக” இருக்கும் என்று ஆனந்த் டெல்டும்டே கூறியுள்ளார். அதனால் அவர் 15 நாள் தற்காலிக பிணை கோரினார்.  அவரின் பினைமனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத வரை போராட்டம் தொடரும் – சம்யுக்தா கிசான் மோர்ச்சா

எல்கர் பர்ஷத் வழக்கில்  சிறையில் இருக்கும் சுரேந்திர காட்லிங், சிறைக்குள் பிளாஸ்டிக் நாற்காலி, மேஜை மற்றும் தனிப்பட்ட ஷேவிங் கிட் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். சிறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்ட நீதிமன்றம், காட்லிங்கின் மனு மீதான விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Source: indianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்