Aran Sei

முதல் தகவல் அறிக்கைக்கு முன் பதிவு செய்யப்படும் தகவல்கள் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒரு புகாரின் மீதான விசாரணையின்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் வாய்மொழியாக பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 160 ன் படி ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராக மாநில  அரசுகள் தீர்மானம் நிறைவேற்றலாம் – உச்சநீதிமன்றம்

மேலும், அவ்வாறு பதிவு செய்யப்படும் குறிப்பை வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராகத் தெரிவிக்க இயலாது எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட 3 கோடி குடும்ப அட்டைகளும், பட்டினிச் சாவுகளும் – உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 160 ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தி செய்தி கூறுகிறது.

இடஒதுக்கீட்டின் வரம்பை மறுஆய்வு செய்யலாமா – மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

மேலும், மக்களிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்களின் நோக்கம் குற்றத்தின் உண்மைத்தன்மையை அறிவது தான். ஆனால் அதை வழக்கு விசாரணையின்போது வாதமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்