Aran Sei

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் – ஒரே வாரத்தில் 5 பேராசிரியர்கள் மரணம்

த்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5 பேராசிரியர்கள் கடந்த வாரம் தீவிர உடல் உபாதைகளினால் இறந்துள்ளதாகவும், அதில் சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்கள் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

அலிகார் முஸ்லிம் பல்கலை., குறித்து அவதூறு செய்தி – 14 ஆண்டுகளுக்குப் பின் மன்னிப்பு கேட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா

கடந்த 24 மணிநேரத்தில் அருங்காட்சியகத் துறையின் தலைவர் இர்பான் அஹ்மத் (61), உதவி பேராசிரியர் பைசல் அஜீஸ் (45) ஆகியோர் உயிரிழந்ததாகவும், இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும் இவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், இவர்களது மரணம் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தீவிர உடல் உபாதைகளினால் இறந்துள்ளதாகவே குறிப்பிட்டுள்ளனர், கொரோனா தொற்று குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்வி சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வலதுசாரிகள் – விரிவான அறிக்கை

கடந்த வாரத்தில், உருது துறையைச் சேர்ந்த பேராசிரியர் மவுலா பக்ஷ் (59), பல்கலைக்கழக பாலிடெக்னிக் பேராசிரியர் சயீத் ஜமான் மற்றும் இறையியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் அஹ்ஸனுல்லா ஃபஹத் (50) ஆகியோர் உயிரிழந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, பேராசிரியர் ஜமான் தனது சொந்த ஊரான மீரட்டில் உயிரிழந்துள்ளதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

உ.பியில் கொல்லப்பட்ட தலித் சிறுமி – பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என காவல்துறை தகவல்

மேலும், கடந்த வாரத்தில் பேராசிரியர் நபி அகமது, பேராசிரியர் இக்பால் அலி, பேராசிரியர் சயீத் ஜாபர் மற்றும் பேராசிரியர் ஜுபைர் அகமது , முன்னாள் புலமுதல்வரும், பல்கலைக்கழக நிர்வாககுழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஹுமாயூன் முராத் (76) ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்