Aran Sei

பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அம்னெஸ்டி இந்தியா தலைவர் – வழக்கு பதிந்திருப்பதால் வெளிநாடு செல்ல தடை என சிபிஐ விளக்கம்

Credit: The Hindu

ர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா பிரிவு தலைவர் ஆகர் பட்டேல், பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளார்.

பெங்களூரூ கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லவதற்காக விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”அமெரிக்க பயணத்திற்காக நீதிமன்ற உத்தரவுமூலம் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்ற நிலையில், சிபிஐயால் இந்தியாவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

”அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா பிரிவுமீது மோடி அரசு வழக்கு பதிந்திருப்பதால், எனக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை ட்விட்டரில் டேக் செய்து அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

”எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.” என்று ஆகர் பட்டேல் கூறியுள்ளார்.

வரதட்சணை முறை பற்றிய செவிலியர் பாடப்புத்தகம் – சந்தையிலிருந்து திரும்பப் பெற்ற புத்தக வெளியீட்டாளர்

இந்தியாவில் சிவில் சமூகங்கள்மீதான தாக்குதல்குறித்து மிச்சிகன், பெர்லி மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகங்கள் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும், அவரது புத்தகங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா செல்ல திட்டமிருந்தார்.

நாட்டில் சிவில் சமூகங்கள் எவ்வாறு தாக்குதலுக்குள்ளாகின்றன என்பதை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது. பத்திரிகையாளர் ராணா அயூப் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயணத்திற்கான கட்டுப்பாடுகள் நீதிமன்றங்களில் சவாலாக இருக்கவில்லை. ஆனால், அரசாங்கத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக எனது உரிமைகளை ஆராய்ந்து, லூக் அவுட் நோட்டீஸை எதிர்கொள்வேன்” என ஆகர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (எஃப்.சி.ஆர்.ஏ) மீறி வெளிநாடு நிதியில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக சிபிஐ வழக்குகளை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக 2019 ஆண்டில் பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஏ.ஐ.ஐ.பி.எல்) மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் டிரஸ்ட் (ஐ.ஏ.ஐ.ஐ.டி) வளாகங்களில் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தப்பட்டது.

சோதனைகளை அடிப்படையாக வைத்து, அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அனைத்து வங்கி கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதை தொடர்ந்து, பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகளை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுத்தியது.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

குஜராத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அளித்த உத்தரவின் பெயரில், மற்றொரு வழக்கில் ஆகர் பட்டேலின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

”இந்த பயணத்திற்காக நான் நீதிமன்றத்திற்கு சென்று எனது பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றேன். இதனை எதிர்த்துக் குஜராத் அரசு வாதிட்டுத் தோல்வியுற்றது. இந்நிலையில், எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கே தெரியாது.” என்று ஆகர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

மக்களுக்கு இலவசம் கொடுத்தால் நாடு திவாலாகி விடும் என்கிற பாஜகவின் கருத்து உண்மையா?

விளக்குகிறார் முன்னாள் ஐஏஎஸ் பால சந்திரன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்