Aran Sei

இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்து – இந்தி ஏகாதிபத்தியம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்

ந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

மேலும், இது இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்த “இந்தி ஏகாதிபத்தியத்தை” திணிக்கும் நடவடிக்கையை முறியடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்தபோது நாடாளுமன்றத்தில் இந்தி என்பது அதிகாரப்பூர்வ மொழிதான், தேசிய மொழி அல்ல என்று கூறியதை காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் நினைவுபடுத்தினார்.

இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி

மேலும், இந்தி ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குச் சாவு மணி அடிக்கும். எனக்கு இந்தி சௌகரியமாக உள்ளது என்பதற்காக மற்றவரிடம் அதைத் திணிப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் இந்தியைத் திணிப்பதன் மூலம் இந்திக்கு கேடு செய்கிறார் அமித்ஷா என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தி பிரச்சனையைக் கிளப்பிவிட்டு, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்விலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அமித்ஷா முயல்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பன்மைத்துவத்துக்கு’ எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா?. இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒற்றை மொழி உதவாது” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று கூறிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி பேசாத மாநிலங்களுக்கு எதிராக பாஜக தனது “கலாச்சார பயங்கரவாதம்” என்ற செயல்திட்டத்தைக் கட்டவிழ்த்து விட முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியை எதிர்ப்பது ஏன்? – தோழர் தியாகு

“பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியைப் பயன்படுத்தி உதவி செய்த சாவர்க்கர் போல் காந்தி பிறந்த மாநிலத்தைச் சேர்ந்த அமித்ஷா நடந்து கொள்கிறார். இந்தி எங்கள் தேசிய மொழி அல்ல, அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Source : NDTV

மாநிலங்கள் தங்களுக்கு பேச இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்வின் கருத்துக்கு ஊடகவியளாலர் ஜீவசகாப்தன் பேசியுள்ளார்.

தமிழுக்கு முன்னடி இந்தி ஒன்னுமே இல்ல… மேலும் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்