Aran Sei

ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேலிசெய்யும் திரிணாமுல்

மேற்கு வங்கத்தில் 2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்குவங்கம் சென்றிருந்தார். பாஜக தொண்டர்களால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் இருக்கும் தேசிய பல்கலைக்கழகமான விஷ்வ பாரதியில் இருக்கும் ரவீந்திரநாத் தாகூர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய அவர் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்

பொதுக்கூட்டங்களில் பேசிய அமித்ஷா, பாஜக 200 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பாண்மையுடன் மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்கும் என கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரசின் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில், திரிணாமூல் காங்கிரசில் யாரும் இல்லாமல், மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

 

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

சுற்றுப்பயணத்தின் முதல் நாளான கடந்த சனிக்கிழமையன்று (19-12-20) அமித் ஷா, பெலிஜுரி கிராமத்தில் இருக்கும் விவசாயியான சனாதன் சிங் இல்லத்தில் மதிய உணவை சாப்பிட்டார். உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி அவருடைய இல்லம் பெயிண்ட் அடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

“சூத்திரர்கள் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்” – பிரக்யா சிங் தாக்கூர்

இது குறித்து அமித் ஷா தன் ட்விட்டர் பக்கத்தில், சனாதன் சிங் இல்லத்தில் சுவையான மதிய உணவை சாப்பிட்டேன் எனவும், இந்த உபசரிப்புக்கும், வரவேற்புக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 5-ம் தேதியன்று மேற்கு வங்கம் வந்த அமித்ஷா, மாதுவா பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அவர்களின் குடும்பத்துடன் மதிய உணவை சாப்பிட்டார்.

இவ்வாறு அமித்ஷாவின் வருகையும் ஏழைகளின் வீட்டில் உணவருந்துவது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் புகைப்பட கருவிகளுடன் கிராமங்களுக்குச் சென்று ஏழைகளுடன் அமர்ந்து உணவருந்தி அதை புகைப்படமெடுத்துக் கொள்வதில் காங்கிரஸ்காரர்கள் திறமையானவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, அப்போதை ஆளும் அரசான காங்கிரசை விமர்சித்து பதிவிட்ட ட்விட் சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது.

அமித்ஷா உணவருந்துவதையும் பிரதமரின் முன்னாள் பதிவையும் ஒப்பிட்டு
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”அச்சச்சோ” (oops) என்று மோடியை கேளி செய்யும் தொனியில் பதிவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பழைய பதிவும் அமித்ஷா ஏழைகள் வீட்டில் உணவருந்தும் படங்களும், சமூக வலைதளங்களில் விரைவாக பகிரப்பட்டுவருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்