நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்தவுடன் குடியுரிமைக் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, மேற்கு வங்கத்தில் குடியுரிமை இல்லாமல் தவிக்கும் மத்துவா சமூகத்துக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்பிரவரி 11), மேற்கு வங்க மாநிலம் தாக்கூர் நகரில் மத்துவா சமூகத்தினர் கலந்துகொண்ட கூட்டத்தில் மத்தி யஉள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். அதில், “கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால், குடியுரிமைக் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பாஜக நிச்சயம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்கும்.” என்று கூறியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக
மேலும், “நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கும். குடியுரிமை இல்லாமல் தவிக்கும் மத்துவா சமூகத்துக்கு இந்தச் சட்டம்மூலம் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமைக் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்போது அதை எதிர்க்கும் நிலையில் மம்தா இருக்கமாட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
பட்டியல் சாதியினர் என வகைப்படுத்தப்பட்ட மத்துவா சமூகத்தினர் வங்க தேசத்திலிருந்து, மேற்கு வங்கத்திற்கு வந்த இந்து மதத்தைச் சேர்ந்த அகதிகள். இவர்களில் பலர் பிரிவினைக்குப் பின்னரும் வங்கதேசம் உருவான பின்னரும் மேற்கு வங்காளத்தில் குடியேறியவர்கள்.
பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி
இது மாநிலத்தில் இரண்டாவது பெரிய பட்டியல் இன சமுதாயமாகும். குடியுரிமையும் அதையொட்டி இப்போது எழுந்துள்ள சர்ச்சைகளும், அந்தச் சமுதாய மக்களிடையே ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
2019 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள பங்கான் தொகுதியின் ஒரு பகுதியான தாகூர்நகரிலிருந்து தொடங்கினார்.
மத்துவா சமுதாயத்தின் பிரபல தலைவராக அறியப்படும் பினாபனி தேவி என்ற ‘போரோ மா’வை அவர் சந்தித்தார். மேலும் போரோ மாவின் பேரனான சாந்தனு தாக்கூருடன் தனது பிரச்சார மேடையைப் பகிர்ந்து கொண்டார். சாந்தனு தாக்கூர், அந்தச் சமூதாயத்தின் அடுத்த தலைவராகப் பார்க்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கத்தில் மீண்டும் தொடங்கியது சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: பிரதமரின் வருகைதான் காரணமா?
கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் அமித்ஷாவின் மேற்கு வங்க வருகையின்போது, மத்துவா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.